If Anybody want to add or update temple details means please mail me at marthandamarea@gmail.com we will put it on this site.

Saturday, 12 July 2014

திருநெல்வேலி நெல்லையப்பர்

திருநெல்வேலி நெல்லையப்பர் கோயில் பாடல் பெற்ற தலங்களில் ஒன்றாகும். சம்பந்தர் பாடல் பெற்ற இத்தலம் திருநெல்வேலி நகரில் அமைந்துள்ளது. இத்தலத்தை பற்றி வழங்கும் நூல்கள் மூன்றாம் திருமுறை, ஏழாம் திருமுறை மற்றும் பன்னிரெண்டாம் திருமுறை திருவிளையாடல் புராணம் முதலியநூல்களாகும். கி.பி.ஏழாம் நூற்றாண்டில் வாழ்ந்து சைவ சமயத்தை வளர்த்த திருஞானசம்பந்த பெருமான் திருநெல்வேலி என்ற பெயருடன் "திருநெல்வேலிப் பதிகம்" பாடியிருப்பதால் அதற்கு முன்பே "திருநெல்வேலி" என்று வழங்கப்பட்டிருக்க வேண்டும். இதனால் இத்தலம் ஏழாம் நூற்றாண்டுக்கு முன்பே சிறப்பு பெற்றது என விளங்குகிறது. தமிழ் நாட்டில், முக்கியமான ஐந்து அம்பலங்களில், இரண்டு அம்பலங்கள் திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ளன. ஸ்ரீ நெல்லையப்பர் காந்திமதி ஆலயம் தாமிர அம்பலமாகவும், ஸ்ரீ குற்றால நாதர் ஆலயம் சித்திர அம்பலமாகவும் உள்ளன.


கோயில் தகவல்கள்
மூலவர்:நெல்லையப்பர் (வேண்ட வளர்ந்தநாதர்)
தாயார்:காந்திமதி, வடிவுடையம்மை
தல விருட்சம்:மூங்கில்
தீர்த்தம்:பொற்றாமரைக்குளம் (ஸ்வர்ண புஷ்கரணி கருமாறித் தீர்த்தம், சிந்துபூந்துறை
ஆகமம்:காரண ஆகமம், காமீக ஆகமம்
சிறப்பு திருவிழாக்கள்:மகா சிவராத்திரி, மார்கழி திருவாதிரை, ஐப்பசி அன்னாபிஷேகம்

Sunday, 6 July 2014

Suchindram Sri Thanumalayar temple | சுசீந்திரம் அருள்மிகு தாணுமாலையர் திருக்கோயில்


மூலவர்:தாணுமாலையர்
உற்சவர்:-
அம்மன்/தாயார்:-
தல விருட்சம்:கொன்றை
தீர்த்தம்:பிரபஞ்சதீர்த்தம்
ஆகமம்/பூஜை:-
பழமை:1000-2000 வருடங்களுக்கு முன்
புராண பெயர்:ஞானாரண்யம்
ஊர்:சுசீந்திரம்
மாவட்டம்:கன்னியாகுமரி
மாநிலம்:தமிழ்நாடு
பாடியவர்கள்:
-
 திருவிழா:
சித்திரை மாதம் தெப்பத்திருவிழா - 1 நாள். ஆவணி பெருநாள் திருவிழா - 9 நாள் மார்கழி திருவாதிரை திருவிழா- 10 நாள் திருவிழா லட்சக்கணக்கான பக்தர்கள் கூடுவர் மாசி திருக்கல்யாண திருவிழா - 9 நாள் திருவிழா
 தல சிறப்பு:
18 அடி உயர ஆஞ்சநேயர் நின்ற நிலையில் உள்ளார். நான்கு இன்னிசைத் தூண்களும் பிறஇடங்களில் காண முடியாத கணேசினி என்ற பெண்ணுருவில் அமைந்த பிள்ளையார் சிற்பம் போன்றவை மிகவும் சிறப்பு வாய்ந்தவை.
திறக்கும் நேரம்:
காலை 6 மணி முதல் 12 மணி வரை, மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.
முகவரி:
அருள்மிகு தாணுமாலையர் திருக்கோயில், சுசீந்திரம் - 629704, கன்னியாகுமரி
போன்:
+ 91- 4652 - 241 421.
 பொது தகவல்:
இந்து மதத்திலுள்ள அனைத்து கடவுள்களுக்கும் இங்கு தனித்தனி சன்னதிகள் உள்ளன. சுசீந்திரம் கோவில் ஓர் உயர்ந்த ஏழு நிலைக் கோபுரத்தை முகப்பில் கொண்டது. இதனை நாஞ்சில் நாட்டின் பல பகுதிகளில் நின்றும் காணலாம். கோபுர உச்சியில் நின்றால் நாஞ்சில் நாட்டின் பெரும் பகுதிகளையும் கன்னியாகுமரிக் கடற்கரையினையும் கண்குளிரக் காணலாம். கோயிலின் அகச்சுற்று மண்டபம் பரப்பிலும் அழகிலும் ராமேஸ்வரம் அகச்சுற்று மண்டபத்திற்கு இணையானது.
பிரார்த்தனை
சிவன், விஷ்ணு, பிரம்மா ஆகிய மூன்று தெய்வங்களும் இத்தலத்தில் குடிகொண்டிருப்பதால் இத்தலத்தில் எல்லா பிரார்த்தனைகளும் நிறைவேறும். திருமண பாக்கியம், குழந்தை பாக்கியம், நீண்ட ஆயுள், நிறைந்த செல்வம் வேண்டி நிறைய பக்தர்கள் இங்கு வேண்டிக்கொள்கின்றனர். தவிர உடல்பலம், மனபலம் ஆகியவை கிடைக்க இத்தலத்து அனுமனிடம் வேண்டிக் கொள்கிறார்கள். தியானம் செய்பவர்கள் இங்குள்ள இறைவனிடம் வந்து மன அமைதியை பெற்று செல்கிறார்கள்.
நேர்த்திக்கடன்:
பட்டு உடைகள் படைத்தல், நைவேத்தியம் செய்து பக்தர்களுக்கு பிரசாதம் தருதல், அபிஷேக ஆராதனைகள், இறைவனுக்கு சந்தன அபிஷேகம், பால் அபிஷேகம், பன்னீர் அபிஷேகம் என அபிஷேக ஆராதனைகளும் செய்யலாம். அனுமனுக்கு வெண்ணெய் காப்பு சாத்தலாம். ஸ்ரீ ராம ஜெயம் எழுதி சாத்தலாம். பொருள் படைத்தோர் அன்னதானமும், திருப்பணிக்கு பொருளுதவியும் செய்யலாம்.
 தலபெருமை:
அயன், அரி அரன் ஆகிய முப்பெருங் கடவுளரும் இக்கோயிலில் வழிபடப் படுகின்றனர். அகலிகையால் ஏற்பட்ட தேவேந்திரனுடைய சாபம் விமோசனம் பெற்ற இடம். இங்கு தேவேந்திரன் உடல் சுத்தி(தூய்மை) பெற்றதால் சுசீந்திரம் என பெயர் வழங்கலாயிற்று. அத்ரி மகரிஷியின் பத்தினி அனுசூயாதேவி, சிவன், பிரம்மா, விஷ்ணு ஆகிய மும்மூர்த்தியை குழந்தைகளாக உருவாக்கி கற்பின் பெருமையை உலகுக்கு எடுத்துக்காட்டி, மூவரும் ஓருருவாக காட்சி தந்த புண்ணிய தலம். தம்பதி சகிதமாக வணங்க வேண்டும்.

அனுமன்:
 இங்குள்ள அனுமன் சிலை மிகவும் அழகானது. பிரம்மாண்டமானது. இதன் உயரம் 18 அடியாகும். அற்புதமான சிற்பமாக அமைந்திருக்கும். இந்த அனுமன் இத்தலத்தில் மிகவும் விசேஷம்.

சிற்பக்கலை சிறப்பு: 
பெரிய அனுமன் சிலையும், இறைவன் ஊர்தியாகிய நந்தியின் உருவமும் நான்கு இன்னிசைத் தூண்களும் மண்டபங்களின் கட்டழகும் இங்கு சிறப்பாகும். எங்கும் காணமுடியாத கணேசினி என்ற பெண்ணுருவில் அமைந்த பிள்ளையார். இது கண்ணுக்கோர் சிறந்த கலைவிருந்தாகும்.
  தல வரலாறு:
மாமுனிவர் அத்ரியும், கற்புக்கரசியாகிய அனுசூயாவும் ஞானாரண்யம் என்னும் பழம் பெயர் பெற்ற சுசீந்திரத்தில் தவம் செய்தனர். ஒரு சமயம் அத்ரி முனிவர் இமயமலை சென்ற போது அயன், அரி, அரன் மூவரும் அனுசூயாவின் கற்பை சோதிக்க எண்ணி பிராமணர் வேடம் அணிந்து ஆசிரமம் வந்து உணவு கேட்டனர். அனுசூயாவும் உணவு படைக்க ஆரம்பிக்க, ஆடை அணிந்த ஒருவரால் உணவு பரிமாறப்படுமாயின் உணவு உண்ண ஆகாது என்று மூவரும் கூறினர். திடுக்கிட்ட அனுசூயாதேவி தன் கணவர் திருவடி கழுவிய நீரை மூவர் மீதும் தெளிக்க பச்சிளங்குழந்தைகளாக மாறினர். பின்பு உணவூட்டி தொட்டிலிட்டு தாலாட்டி தூங்க செய்தாள். சிறிது நேரங்கழித்து மூவரின் தேவியரும் வர, அனுசூயா மூவர்க்கும் பழைய உருவை கொடுத்தாள். அப்போது திரும்பி வந்த அத்ரி முனிவரும் அனுசூயையோடு அகமிக மகிழ்ந்தவராய் மும்மூர்த்திகளின் காட்சி பெற்றனர். இந்நிகழ்ச்சியை நினைவூட்டவே சுசீந்திரம் கோவில் கட்டப்பட்டு முப்பெரும் கடவுளரும் வழிபடப் பட்டு வருகின்றனர்.
சிறப்பம்சம்:
அதிசயத்தின் அடிப்படையில்: 18 அடி உயர ஆஞ்சநேயர் நின்ற நிலையில் உள்ளார். நான்கு இன்னிசைத் தூண்களும் பிறவிடத்தில் காண முடியாத கணேசினி என்ற பெண்ணுருவில் அமைந்த பிள்ளையார் சிற்பம் போன்றவை மிகவும் சிறப்பு வாய்ந்தவை.

Moolavar:Thanumalayan
Urchavar:-
Amman / Thayar:-
Thala Virutcham:-
Theertham:-
Agamam / Pooja:-
Old year:1000-2000 years old
Historical Name:-
City:Suseendram
District:Kanyakumari
State:Tamil Nadu

Saturday, 5 July 2014

NAGERCOIL NAGARAJA TEMPLE


மூலவர்:நாகராஜர்
உற்சவர்:-
அம்மன்/தாயார்:-
தல விருட்சம்:ஓடவள்ளி
தீர்த்தம்:நாகதீர்த்தம்
ஆகமம்/பூஜை:சைவம், வைணவம்
பழமை:1000-2000 வருடங்களுக்கு முன்
புராண பெயர்:-
ஊர்:நாகர்கோவில்
மாவட்டம்:கன்னியாகுமரி
மாநிலம்:தமிழ்நாடு





 திருவிழா:
தை மாதத்தில் பிரம்மோற்ஸவம், ஆவணி ஞாயிறு, ஆவணி ஆயில்யம் நட்சத்திர நாட்களில் விசேஷ பூஜை, கிருஷ்ண ஜெயந்தி, நவராத்திரி, திருக்கார்த்திகை.
 தல சிறப்பு:
இங்கு நாகராஜசுவாமிகள் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார்கள். நாகதோஷம் உள்ளவர்களுக்கு இத்தலம் சிறந்த பிரார்த்தனை தலமாக அமைந்துள்ளது.
திறக்கும் நேரம்:
காலை 4 மணி முதல் 11.30 மணி வரை, மாலை 5 மணி முதல் இரவு 8.30 மணி வரை திறந்திருக்கும்.
முகவரி:
அருள்மிகு நாகராஜா சுவாமி திருக்கோயில், நாகர்கோவில் - 629 001. கன்னியாகுமரி மாவட்டம்.
போன்:
+91- 4652- 232 420, 94439 92216
 பொது தகவல்:
தனித் தனி சன்னதியில் காசி விஸ்வநாதர், அனந்த கிருஷ்ணர், கன்னிமூல கணபதி ஆகியோர் அருள்பாலிக்கிறார்கள். பிரகாரத்தில் காவல் தெய்வமான நாகமணி பூதத்தான், சாஸ்தா, பாலமுருகன் சன்னதிகள் உள்ளன.
பிரார்த்தனை
நாக தோஷம், ராகு, கேது தொடர்பான தோஷ நிவர்த்திக்கு இக்கோயிலில் வேண்டிக்கொள்கிறார்கள்
நேர்த்திக்கடன்:
இங்கு வேண்டி பிரார்த்தனை நிறைவேறியவர்கள் நாகராஜருக்கு பால் பாயாசம் படைத்து, பாலபிஷேகம் செய்வித்தும், கோயில் வளாகத்தில் நாகபிரதிஷ்டை செய்தும் நேர்த்திக்கடன் நிறைவேற்றுகின்றனர்.
 தலபெருமை:
நாகர் வழிபாடு ஏன்?: சிவனுக்கு நந்தி, பெருமாளுக்கு கருடாழ்வார், விநாயகருக்கு மூஞ்சூறு, முருகனுக்கு மயில் என ஜீவராசிகளை சுவாமிகளின் வாகனமாக்கி வழிபடுகிறோம். இவற்றிற்கு முக்கியத்துவம் கொடுத்து தனியே கோயில்கள் அமைத்து வழிபடும் வழக்கம் இல்லை. ஆனால், நாகத்திற்கு சன்னதி அமைத்து வணங்குகிறோம். நாகர் வழிபாடு, மனித வாழ்விற்கான உயர்ந்த தத்துவத்தை உணர்த்துகிறது.புழுதியில் சென்றாலும், நாகத்தின் மீது தூசு ஒட்டுவதில்லை. அதாவது தான் எதில் இருந்தாலும், அதை தன்னில் ஏற்றுக்கொள்ளாத தன்மையுடையதாக நாகம் இருக்கிறது. மனிதர்களும் மனைவி, மக்கள், பொன், பொருள் என எல்லாவற்றிலும் உழன்றாலும், அவற்றின் மீதும் பற்றில்லாதவர்களாக வாழ வேண்டும் என்பதை நாகம் உணர்த்துகிறது.

ஓலைக்கூரை சன்னதி: மூலஸ்தானத்தில் நாகராஜர், ஐந்து தலைகளுடன் சுயம்புவாக காட்சி தருகிறார். சிவன் கோயில்களில் சண்டி, முண்டி என்பவர்களும், பெருமாள் கோயில்களில் ஜெயன், விஜயன் என்பவர்களும் துவாரபாலகர்களாக இருப்பர். ஆனால், இக்கோயிலில் தர்னேந்திரன் என்ற ஆண் நாகமும், பத்மாவதி என்னும் பெண் நாகமும் துவாரபாலகர்களாக உள்ளன. நாகராஜாவிற்காக அமைந்த தலம் என்பதால், நாகங்களையே  துவாரபாலர்களாக அமைத்துள்ளனர். நாகராஜர் சன்னதி எதிரிலுள்ள தூணில், நாககன்னி சிற்ப வடிவில் இருக்கிறாள். தற்போதும் இங்கு நாகங்கள் வசிப்பதாகவும், இவையே இக்கோயிலைப் பாதுகாப்பதாகவும் சொல்கிறார்கள். நாகங்கள் வசிப்பதற்கேற்ப மூலஸ்தானத்தை ஓலைக்கூரையால் வேய்ந்துள்ளனர். ஆடி மாதத்தில் இதைப் பிரித்து, புதிய கூரை வேய்கின்றனர். நாகராஜருக்கு பூஜை செய்யும் அர்ச்சகர்களே கூரை கட்டும் பணியைச் செய்கின்றனர்.

தோஷ நிவர்த்தி: பாற்கடலில் பள்ளி கொண்டிருக்கும் மகாவிஷ்ணுவைத் தாங்கும் ஆதிசேஷன், அவர் ராமனாக அவதாரம் எடுத்தபோது தம்பி லட்சுமணராக பிறந்தார். எனவே, லட்சுமணரின் நட்சத்திரமான ஆயில்யத்தன்று நாகராஜாவிற்கு விசேஷ பூஜைகள் நடக்கிறது. ராகு, கேது தோஷம் உள்ளவர்கள் இந்நாளில் நாகராஜாவிற்கு பாலபிஷேகம் செய்வித்து வேண்டிக்கொள்கிறார்கள். இதுதவிர, தினமும் காலை 10 மணிக்கு பாலபிஷேகம் நடக்கும். நாகராஜரிடம் வேண்டி கோரிக்கை நிறைவேறியவர்கள் பால் பாயாசம் படைத்தும் வழிபடுகிறார்கள். கோயில் வளாகத்திலுள்ள அரச மரத்தடியில் நாகர் சிலைகளை வைத்தும் நேர்த்திக்கடன் செலுத்துவதுண்டு.

நிறம் மாறும் மணல்: மூலஸ்தானத்தில் நாகராஜர் இருக்குமிடம் மணல் திட்டாக இருக்கிறது. வயல் இருந்த இடம் என்பதால், இவ்விடத்தில் நீர் ஊறிக் கொண்டிருக்கிறது. இந்த நீருடன் சேர்ந்த மணலையே பிரசாதமாகத் தருகிறார்கள். தட்சிணாயண புண்ணிய காலத்தில் (ஆடி முதல் மார்கழி மாதம் வரை) இந்த மணல் கருப்பு நிறத்திலும், உத்தராயண புண்ணிய காலத்தில் (தை முதல் ஆனி வரை) வெள்ளை நிறத்திலும் இருப்பது சிறப்பு.

ஆவணி ஞாயிறு விசேஷம் ஏன்?: இந்தக் கோயிலில் ஆவணி ஞாயிற்றுக்கிழமைகளில் மக்கள் கூட்டம் அலைமோதும். இதற்கான காரணம் என்ன தெரியுமா? ஆவணி  மாதம் மழைக்காலமாகும். இக்காலத்தில் பாம்புகள் நடமாட்டம் அதிகமிருக்கும். இவற்றால் விவசாயிகளுக்கு துன்பம் ஏற்படக்கூடாது என்பதற்காக ஆவணியில் அவர்களது குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் பாம்பு வழிபாடு மேற்கொண்டனர். நாகர் சிலைகளுக்கு பாலபிஷேகம் செய்து மகிழ்வித்தனர். ராகு வழிபாட்டிற்கு உகந்த கிழமை ஞாயிறு என்பதாலும், மலையாள ஆண்டில் முதல் மாதம் ஆவணி என்பதாலும், இந்த மாதத்து ஞாயிற்றுக்கிழமைகளை சிறப்பு வழிபாட்டுக்குரிய காலமாக கொண்டனர் என்றும் ஒரு கருத்து உண்டு. கேரள முறைப்படி இக்கோயிலில் பூஜை நடக்கிறது.

பெருமாளுக்கு திருவிழா: நாகராஜர் சன்னதிக்கு வலப்புறம் அனந்தகிருஷ்ணர், காசி விஸ்வநாதர் சன்னதிகள் உள்ளன. தினமும் நாகராஜருக்கு பூஜை செய்தபின்பு, இவர்களுக்கு பூஜை நடக்கும். அர்த்தஜாம பூஜையில் மட்டும், அனந்தகிருஷ்ணருக்கு முதல் பூஜை செய்வர். இக்கோயிலின் பிரதான மூலவர் நாகராஜர் என்றாலும், அனந்தகிருஷ்ணருக்கே கொடிமரம் அமைக்கப்பட்டுள்ளது. தை மாதத்தில் பிரம்மோற்ஸவமும் இவருக்கே நடக்கிறது. தைப்பூசத்தன்று இவர் தேரில் எழுந்தருளுவார். ஆயில்யத்தன்று ஆராட்டு வைபவம் நடக்கும். கிருஷ்ண ஜெயந்தி விழாவும் இவரது சன்னதியில் சிறப்பாகக் கொண்டாடப்படும்.

கொடிமரத்தில் ஆமை: பெருமாள் கோயில் கொடிமரங்களின் உச்சியில், கருடனை வடிவமைப்பர். இங்குள்ள அனந்த கிருஷ்ணர் சன்னதி கொடிமரத்தில் கருடனுக்குப் பதிலாக ஆமையை வடித்துள்ளனர். பாம்பும், கருடனும் விரோதிகள் என்பதால் கருடனை இங்குள்ள கொடிமரத்தில் வடிக்கவில்லை. அதற்குப் பதிலாக  ஆமையை வடித்துள்ளனர். விசேஷ காலங்களிலும், மாதாந்திர ஆயில்ய நட்சத்திர நாட்களிலும் அனந்தகிருஷ்ணர் ஆமை வாகனத்திலேயே புறப்பாடாகிறார். தேவர்கள் திருப்பாற்கடலைக் கடைந்தபோது, மகாவிஷ்ணு கூர்ம (ஆமை) அவதாரம் எடுத்ததன் அடிப்படையில் ஆமையை வடிவமைத்ததாகச் சொல்கிறார்கள்.

மகாமேரு மாளிகை: இது கிழக்கு நோக்கிய கோயில் என்றாலும், தெற்கு வாசலே பிரதானமாக இருக்கிறது. இந்த வாசலை, "மகாமேரு மாளிகை' என்று அழைக்கிறார்கள். மாளிகை வடிவில் உயரமாக அமைந்த வாசல் என்பதால் இப்பெயர் ஏற்பட்டது. நாகராஜர் சன்னதியின் இடப்புறம் நாகர் தீர்த்தம் இருக்கிறது. ஓடவல்லி என்னும் கொடி இத்தலத்தின் விருட்சம். தற்போது இக்கொடி இல்லை. வெளிப்பிரகாரத்தில் நாக உருவம் கொண்ட நாகலிங்க மரம் உள்ளது. இதில் பூக்கும் நாகலிங்கப் பூவை நாகராஜரின் குறியீடாகக் கருதி வழிபடுகிறார்கள்.

"அம்மச்சி' துர்க்கை: கோயில் வளாகத்தில் துர்க்கை சன்னதி இருக்கிறது. இச்சிலை இங்குள்ள நாகர் தீர்த்தத்தில் கிடைத்ததால் இவளை "தீர்த்த துர்க்கை' என்று அழைக்கிறார்கள். ராகு, கேது தோஷம் உள்ளவர்கள் செவ்வாய்க்கிழமை ராகு காலத்தில் நாகராஜரையும், இவளையும் வழிபடுகிறார்கள். வயது முதிர்ந்த பெண்களை "அம்மச்சி' என்று மலையாளத்தில் அழைப்பது வழக்கம். இந்த துர்க்கையையும், தங்களுக்கு வழிகாட்டும் பெரியவளாகக் கருதி, "அம்மச்சி துர்க்கை' என்று அழைக்கிறார்கள்.
  தல வரலாறு:
பெண் ஒருத்தி வயலில் நெற்கதிர்களை அறுத்துக் கொண்டிருந்தாள். அவ்வேளையில், ஒரு கதிரில் இருந்து ரத்தம் வெளிப்பட்டது. இதைக்கண்டு பயந்தவள், ஊருக்குள் சென்று மக்களிடம் கூறினாள். அவர்கள் இங்கு வந்தபோது, நெற்கதிருக்கு கீழே நாகராஜர் வடிவம் இருந்ததைக் கண்டனர். பின்பு நாகராஜரைச் சுற்றிலும் ஓலைக்குடிசை வேய்ந்து சிறிய சன்னதி அமைத்தனர். தோல் வியாதியால் பாதிக்கப்பட்ட களக்காடு மன்னர் மார்த்தாண்டவர்மா, இங்கு வந்தார். சுவாமியை வழிபட்டு நோய் நீங்கப்பெற்றார். மகிழ்ந்த மன்னர் இங்கு பெரியளவில் கோயில் எழுப்பினார். சுவாமியின் பெயரால் இந்த ஊருக்கும், "நாகர்கோவில்' என பெயர் வந்தது. தமிழகத்தில் நாகர் (பாம்பு) வழிபாட்டிற்கென அமைந்த பெரியகோயில் நாகர்கோவில் மட்டுமே ஆகும்.
சிறப்பம்சம்:
அதிசயத்தின் அடிப்படையில்: இங்கு நாகராஜசுவாமிகள் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார்கள்.
Moolavar:Nagarajar
Urchavar:-
Amman / Thayar:-
Thala Virutcham:Odavalli
Theertham:Naga theertham
Agamam / Pooja:Saiva and Vaishnava procedures
Old year:1000-2000 years old
Historical Name:-
City:Nagercoil
District:Kanyakumari
State:Tamil Nadu




 Festival:
Thai Brahmmotsavam in January-February; Aavani Sundays and Aavani Aslesha (Aayilyam) star day and Krishna Jayanthi in August-September; Navarathri in September-October and Tirukarthikai in November-December are the festivals celebrated in the temple.
 Temple's Speciality:
Sri Nagaraja Swami is a swayambumurthi in the temple. This is an ideal prayer destination for those facing adverse aspects of serpent planets.
Opening Time:
The temple is open from 4.00 a.m. to 11.30 a.m. and from 5.00 p.m. to 8.30 p.m.
Address:
Sri Nagarajaswami temple, Nagercoil – 629 001, Kanyakumari district
Phone:
+91- 4652- 232 420, 94439 92216
 General Information:
Lords Kasi Viswanatha, Ananthakrishna, Kannimoola Ganapathi grace the devotees from separate shrines.  Custodian deities Nagamani Bhoothathan, Sastha and Lord Balamuruga are in the prakara.
Prayers
Devotees pray in the temple for relief from the adverse aspects of serpent planets.
Thanks giving:
Devotes perform abishek to Nagaraja with milk and offer milk porridge – Paal Paayasam – nivedhana. They also install Naga idols in the temple campus
 Greatness Of Temple:
We do not have separate temples for Nandhi the vahan of Shiva, Garuda of Perumal, peacock for Muruga and the Moonjuru (belonging to the rat family) for Vinayaka.  But we have temples for the serpents-Nagas.  There is a philosophy behind this worship.  Though moving through dust, it does not touch the Naga body.  Nagas-snakes are not affected by any object on which they move or live around.  It is said that though we humans have to live in any environment such as family, material efforts or in natural environment, they should be untouched by the effects of such life and should maintain detachment and individuality.

Presiding deity Nagaraja graces from the sanctum sanctorum with five heads.  As Chandi and Mundi are the Dwarapalakas in Shiva temples and Jayan and vijayan in Vishnu temples, a male snake Darnendran by name and female snake named Padmavathi are the dwarapalakas (securities) in this temple.  It is believed that snakes are here as securities of the temple.  Therefore, to facilitate their living, the sanctum sanctorum has a thatched roof.  During the month Aadi-July-August- the roof is renewed.

It may be recalled that the divine serpent Adisesha in the milk ocean serving as a bed to Lord Vishnu, was born as Lakshmana when Lord took the Rama Avatar. Lakshmana’s birth star was Aslesha-Aayila.  Based on this fact, people facing Naga doshas perform milk abishek to Nagaraja on this star day.  Also the milk abishek takes place each day at 10.00 a.m.  Devotees offer Paal Payasam –Milk porridge as nivedhana and place naga idols in the temple campus.

The sanctum sanctorum is a sand surface and wet as it was a field earlier.  This wet sand is offered as Prasad.  The wonder is that the sand is black during the Dakshinayana Punya Kala being the southward journey period of Sun covering the months July to December-February and white during the Utharayana Punyakala being the northward journey period of Sun covering the months February to December-January.

Monsoon begins in the month of Aavani-August-September when movements of snakes would be more.  To avoid any hardship or accidents, farmers took up this Naga worship and comforted their fury with milk abishek.  It also happens that Sunday is a suitable day for Rahu-serpent planet worship.  Aavani also happens to be the first month according to Malayalam calendar.  Pujas are performed in the temple according Kerala tradition.

Lords Ananthakrishna and Kasi Viswanatha shrines are right of Nagaraja shrine. After puja to Nagaraja, pujas are performed in these shrines.  However, the last puja of the day-Arthajama puja- is dedicated to Lord Ananhakrishna.  Though Nagaraja is the presiding deity of the temple, kodimaram-flag post is for Lord Ananthakrishna only.  Thai Brahmmotsavam is also dedicated to Perumal only with car festival on Thai Poosam day.   Aarattu and Krishna Jayanthi too are celebrated for Lord Ananthakrishna.

It is also noteworthy that a tortoise occupies the place of Garuda in the flag post against tradition.  Garuda and snakes are natural enemies.  This is a temple for the snake.  Therefore, to avoid an unfriendly atmosphere, it is said tortoise is chosen for the place of Garuda.  Other reason is that Lord Vishnu took the Koorma (Tortoise) Avathar to hold the churning stick while taking nectar for the milk ocean.  This is as such a mark of respect to the tortoise too.  There is a garden of Nagalinga flower plants too.

The temple has a shrine for Mother Durga.  As the idol was found in the sacred spring here, She is praised as Theertha Durga.  People facing adverse aspects of Rahu and/or Rahu-Kethu planets worship here during the Rahukalam time on Tuesdays – between 3.00 p.m. and 4.30 p.m.  Keralites call aged women as Ammachi as a mark of respect.  Mother Durga here is addressed respectfully as Ammachi Durga.
  Temple History:
A woman was cutting the paddy crops in the field.  Blood oozed out from one bunch.  Scared woman informed her experience to the people of the place. They came to the place and found a Nagaraja idol.  They immediately built a hut around the Nagaraja.  The king of Kerala, Marthanda Varma, suffering from skin problems came and worshipped here.  His disease was cured.  He built a big temple here then.  This is the only big temple built exclusively for Nagaraja worship in Tamilnadu.  The place also came to be known as Nagercoil.
Special Features:
Miracle Based: Sri Nagaraja Swami is a swayambumurthi in the temple.