| மூலவர் | : | தாணுமாலையர் |
| உற்சவர் | : | - |
| அம்மன்/தாயார் | : | - |
| தல விருட்சம் | : | கொன்றை |
| தீர்த்தம் | : | பிரபஞ்சதீர்த்தம் |
| ஆகமம்/பூஜை | : | - |
| பழமை | : | 1000-2000 வருடங்களுக்கு முன் |
| புராண பெயர் | : | ஞானாரண்யம் |
| ஊர் | : | சுசீந்திரம் |
| மாவட்டம் | : | கன்னியாகுமரி |
| மாநிலம் | : | தமிழ்நாடு |
|
|
|
| பாடியவர்கள்: | |
| | |
| - | |
| | |
| திருவிழா: | |
| | |
| சித்திரை மாதம் தெப்பத்திருவிழா - 1 நாள். ஆவணி பெருநாள் திருவிழா - 9 நாள் மார்கழி திருவாதிரை திருவிழா- 10 நாள் திருவிழா லட்சக்கணக்கான பக்தர்கள் கூடுவர் மாசி திருக்கல்யாண திருவிழா - 9 நாள் திருவிழா | |
| | |
| தல சிறப்பு: | |
| | |
| 18 அடி உயர ஆஞ்சநேயர் நின்ற நிலையில் உள்ளார். நான்கு இன்னிசைத் தூண்களும் பிறஇடங்களில் காண முடியாத கணேசினி என்ற பெண்ணுருவில் அமைந்த பிள்ளையார் சிற்பம் போன்றவை மிகவும் சிறப்பு வாய்ந்தவை. | |
| | |
| திறக்கும் நேரம்: | |
|
| | |
| காலை 6 மணி முதல் 12 மணி வரை, மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும். | |
| | |
| முகவரி: | |
| | |
| அருள்மிகு தாணுமாலையர் திருக்கோயில், சுசீந்திரம் - 629704, கன்னியாகுமரி | |
| | |
| போன்: | |
| | |
| + 91- 4652 - 241 421. | |
| | |
| பொது தகவல்: | |
| | |
| இந்து மதத்திலுள்ள அனைத்து கடவுள்களுக்கும் இங்கு தனித்தனி சன்னதிகள் உள்ளன. சுசீந்திரம் கோவில் ஓர் உயர்ந்த ஏழு நிலைக் கோபுரத்தை முகப்பில் கொண்டது. இதனை நாஞ்சில் நாட்டின் பல பகுதிகளில் நின்றும் காணலாம். கோபுர உச்சியில் நின்றால் நாஞ்சில் நாட்டின் பெரும் பகுதிகளையும் கன்னியாகுமரிக் கடற்கரையினையும் கண்குளிரக் காணலாம். கோயிலின் அகச்சுற்று மண்டபம் பரப்பிலும் அழகிலும் ராமேஸ்வரம் அகச்சுற்று மண்டபத்திற்கு இணையானது. | |
| | |
|
|
| பிரார்த்தனை | |
| | |
| சிவன், விஷ்ணு, பிரம்மா ஆகிய மூன்று தெய்வங்களும் இத்தலத்தில் குடிகொண்டிருப்பதால் இத்தலத்தில் எல்லா பிரார்த்தனைகளும் நிறைவேறும். திருமண பாக்கியம், குழந்தை பாக்கியம், நீண்ட ஆயுள், நிறைந்த செல்வம் வேண்டி நிறைய பக்தர்கள் இங்கு வேண்டிக்கொள்கின்றனர். தவிர உடல்பலம், மனபலம் ஆகியவை கிடைக்க இத்தலத்து அனுமனிடம் வேண்டிக் கொள்கிறார்கள். தியானம் செய்பவர்கள் இங்குள்ள இறைவனிடம் வந்து மன அமைதியை பெற்று செல்கிறார்கள். | |
| | |
| நேர்த்திக்கடன்: | |
| | |
| பட்டு உடைகள் படைத்தல், நைவேத்தியம் செய்து பக்தர்களுக்கு பிரசாதம் தருதல், அபிஷேக ஆராதனைகள், இறைவனுக்கு சந்தன அபிஷேகம், பால் அபிஷேகம், பன்னீர் அபிஷேகம் என அபிஷேக ஆராதனைகளும் செய்யலாம். அனுமனுக்கு வெண்ணெய் காப்பு சாத்தலாம். ஸ்ரீ ராம ஜெயம் எழுதி சாத்தலாம். பொருள் படைத்தோர் அன்னதானமும், திருப்பணிக்கு பொருளுதவியும் செய்யலாம். | |
| | |
| தலபெருமை: | |
| | |
| அயன், அரி அரன் ஆகிய முப்பெருங் கடவுளரும் இக்கோயிலில் வழிபடப் படுகின்றனர். அகலிகையால் ஏற்பட்ட தேவேந்திரனுடைய சாபம் விமோசனம் பெற்ற இடம். இங்கு தேவேந்திரன் உடல் சுத்தி(தூய்மை) பெற்றதால் சுசீந்திரம் என பெயர் வழங்கலாயிற்று. அத்ரி மகரிஷியின் பத்தினி அனுசூயாதேவி, சிவன், பிரம்மா, விஷ்ணு ஆகிய மும்மூர்த்தியை குழந்தைகளாக உருவாக்கி கற்பின் பெருமையை உலகுக்கு எடுத்துக்காட்டி, மூவரும் ஓருருவாக காட்சி தந்த புண்ணிய தலம். தம்பதி சகிதமாக வணங்க வேண்டும்.
அனுமன்: இங்குள்ள அனுமன் சிலை மிகவும் அழகானது. பிரம்மாண்டமானது. இதன் உயரம் 18 அடியாகும். அற்புதமான சிற்பமாக அமைந்திருக்கும். இந்த அனுமன் இத்தலத்தில் மிகவும் விசேஷம்.
சிற்பக்கலை சிறப்பு: பெரிய அனுமன் சிலையும், இறைவன் ஊர்தியாகிய நந்தியின் உருவமும் நான்கு இன்னிசைத் தூண்களும் மண்டபங்களின் கட்டழகும் இங்கு சிறப்பாகும். எங்கும் காணமுடியாத கணேசினி என்ற பெண்ணுருவில் அமைந்த பிள்ளையார். இது கண்ணுக்கோர் சிறந்த கலைவிருந்தாகும். | |
| | |
|
| தல வரலாறு: | |
| | |
| மாமுனிவர் அத்ரியும், கற்புக்கரசியாகிய அனுசூயாவும் ஞானாரண்யம் என்னும் பழம் பெயர் பெற்ற சுசீந்திரத்தில் தவம் செய்தனர். ஒரு சமயம் அத்ரி முனிவர் இமயமலை சென்ற போது அயன், அரி, அரன் மூவரும் அனுசூயாவின் கற்பை சோதிக்க எண்ணி பிராமணர் வேடம் அணிந்து ஆசிரமம் வந்து உணவு கேட்டனர். அனுசூயாவும் உணவு படைக்க ஆரம்பிக்க, ஆடை அணிந்த ஒருவரால் உணவு பரிமாறப்படுமாயின் உணவு உண்ண ஆகாது என்று மூவரும் கூறினர். திடுக்கிட்ட அனுசூயாதேவி தன் கணவர் திருவடி கழுவிய நீரை மூவர் மீதும் தெளிக்க பச்சிளங்குழந்தைகளாக மாறினர். பின்பு உணவூட்டி தொட்டிலிட்டு தாலாட்டி தூங்க செய்தாள். சிறிது நேரங்கழித்து மூவரின் தேவியரும் வர, அனுசூயா மூவர்க்கும் பழைய உருவை கொடுத்தாள். அப்போது திரும்பி வந்த அத்ரி முனிவரும் அனுசூயையோடு அகமிக மகிழ்ந்தவராய் மும்மூர்த்திகளின் காட்சி பெற்றனர். இந்நிகழ்ச்சியை நினைவூட்டவே சுசீந்திரம் கோவில் கட்டப்பட்டு முப்பெரும் கடவுளரும் வழிபடப் பட்டு வருகின்றனர். | |
| | |
|
| சிறப்பம்சம்: | |
| | |
| அதிசயத்தின் அடிப்படையில்: 18 அடி உயர ஆஞ்சநேயர் நின்ற நிலையில் உள்ளார். நான்கு இன்னிசைத் தூண்களும் பிறவிடத்தில் காண முடியாத கணேசினி என்ற பெண்ணுருவில் அமைந்த பிள்ளையார் சிற்பம் போன்றவை மிகவும் சிறப்பு வாய்ந்தவை.
|
| Moolavar | : | Thanumalayan |
| Urchavar | : | - |
| Amman / Thayar | : | - |
| Thala Virutcham | : | - |
| Theertham | : | - |
| Agamam / Pooja | : | - |
| Old year | : | 1000-2000 years old |
| Historical Name | : | - |
| City | : | Suseendram |
| District | : | Kanyakumari |
| State | : | Tamil Nadu |
|
|
|
|
|
No comments:
Post a Comment