If Anybody want to add or update temple details means please mail me at marthandamarea@gmail.com we will put it on this site.

Monday 2 February 2015

அருள்மிகு ஸ்ரீசுயம்புலிங்க சுவாமி திருக்கோயில் தோற்ற வரலாறு

 நெல்லை மாவட்டத்தில் தென்கோடியில் கடற்கறையில் அமைந்துள்ள சிவஸ்தலம் இது. உவரியில் கீழவூர் ,மேலவூர் என இரு பகுதிகளாக இருந்தன.

கீழ உவரியில் யாதவர் குல மக்கள் வாழ்ந்தனர்.இவர்கள் மேல உவரிக்கு ஒற்றையடி பாதையாக சென்று மோர்,தயிர்,பால் விற்று வந்தனர்...
இவர்களுல் ஒரு வயதான பாட்டியும் தன் தலை மீது மோர்,தயிர் ,பால் பானைகளை சுமந்து கொண்டு அதே ஒற்றையடி பாதை வழியாக மேல உவரிக்கு சென்று விற்று வயிற்றுப் பிழைப்பை நடத்தி வந்தார்...
அவ்வாறாக வயிற்று பிழைப்பை நடத்தி வந்த வயதான பாட்டிக்கு குறிப்பிட்ட சில தினங்களாக தொடர்ச்சியாக அந்த ஒற்றையடி பாதையில் படர்ந்து கிடந்த கடம்ப கொடியில் கால் இடறி தயிர் ,மோர் ,பால் சுமந்து வந்த பானை விழுந்து உடைந்த வண்ணம் இருந்தது...ஓரே இடத்தில் மட்டுமே மீண்டும் மீண்டும் கால் இடறி விழுந்ததால் அந்த வயதான பாட்டி தன் கணவனிடம் முறையிட்டு அழுதாள்.பாட்டியின் கணவனோ கடம்பக் கொடியை வெட்டி ஒற்றையடி பாதையை சரி செய்ய கோடாரியுடன் புறப்பட்டு சென்றார்...


கடம்பக்கொடியின் வேற் உள்ள பகுதியை வெட்டி எறிந்த போது ....."இரத்தம்" பீறிட்டு ஊற்று போல வருவதை கண்டு அஞ்சி நடுங்கிய வயதான ஆயர் ஆட்சியர் ஊர் மக்களிடம் தெரிவித்தனர்...
குறிப்பிட்ட இடத்திற்க்கு ஊர் மக்களும் திரண்டு வந்தனர்..
அப்போது ....அங்கே கடம்பக்கொடியின் வேற்களுக்கு இடையே மறைந்து இருந்த சுயம்புலிங்கத்தின் மேலே கோடாரிமுனையின் வெட்டு பட்டு இருந்த பகுதியில் இருந்து இரத்தம் வருவதை கண்டு வணங்கினர்....
கூட்டத்தில் இருந்த ஒருவருக்கு தெய்வ பிரசன்னமாகி....குறிப்பிட்ட ஒரு பகுதியை கூறி...அங்கே சந்தனமரம் இருப்பதாகவும் அந்த மரத்தின் சந்தனத்தை எடுத்து அறைத்து வெட்டுப் பட்ட சுயம்பு லிங்கத்தின் மேலே பூசினால் இரத்தம் பீறிட்டு வருவது நின்று விடும் என கிடைத்த அருள் வாக்கினால்...அதே போன்று செய்து பலனையும் கண்டனர்
......
அன்று முதல் இன்று வரை இந்த திருக்கோவிலில் சந்தனம் சுயம்பு லிங்கத்தின் தலையில் வெட்டுபட்ட பகுதி ( " V " போன்ற பகுதியில் ..) சந்தனத்தை வைத்து சுவாமிக்கு பூஜை செய்து வருகின்றனர்....


சுவாமியின் பல அற்புதங்களினால் ...சுவாமியின் பெருமையானது எட்டுதிக்கும் பரவி வந்தது...
‪#‎உவரிக்கு‬ வருக ...
சுவாமியின் அருளை பெறுக.....

No comments:

Post a Comment